வூஹான், 13 அக்டோபர் (பெர்னாமா) -- வூஹான் பொது டென்னிஸ் பட்டத்தை, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் கைப்பற்றினார்.
தொடர்ச்சியாக ஒன்பது இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண் வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்துள்ள அவர், இந்த இறுதி ஆட்டத்தில் ஜெசிக்கா பெகுலாவை 6-4, 7-5 என்று நேரடி செட்களில் தோற்கடித்தார்.
தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களை வென்று, இறுதி ஆட்டத்திற்கு தகுதிப் பெற்ற காஃப் இந்த வெற்றியின் வழி தமது 11-வது WTA பட்டத்தையும் வென்றார்.
21 வயதான அவர், இப்போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஒரு செட்டையும் இழக்காமல் தொடரை வெற்றிகரமாக முடித்தார்.
பிரான்ஸ் பொது டென்னிஸ் வெற்றியாளரான அவர், 2013 முதல் 2015 வரை தொடர்ந்து 12 முறை டென்னிஸ் பட்டங்களை கைப்பற்றி இருக்கும் செரினா வில்லியம்ஸ் சாதனையுடன் சமன் செய்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)