கோலாலம்பூர், 13 அக்டோபர் (பெர்னாமா) -- இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது, அலுவலகத்திலிருந்து 25 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் அரசாங்க ஊழியர்கள், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க துறைத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அரசாங்க ஊழியர்கள், துறைத் தலைவரிடம் உரிய பரிசீலனையைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுவதாக பொது சேவை துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் அமலாக்கம், நிபந்தனை மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும் என்றும் JPA குறிப்பிட்டுள்ளது.
மடானியின் முக்கிய பண்புகளான நல்வாழ்வு, கருணை மற்றும் பொது சேவை வழங்கலில் செயல்திறன் ஆகியவற்றிற்கு இணங்க, நெகிழ்ச்சியான மற்றும் அக்கறையுள்ள நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் மடானி அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏதுவாகவும் அக்கொள்கை அமைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)