பெல்ஜியம், 18 அக்டோபர் (பெர்னாமா)-- ஐரோப்பிய பொது டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு, ஜியோவானி மெபெட்ஷி பெரிகார்டு தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அவர் லோரென்சோ முசெட்டியுடன் விளையாடினார்.
அனுபவம் உள்ள லோரென்சோ முசெட்டி வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், ஜியோவானி மெபெட்ஷி பெரிகார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 என்ற நேரடி செட்களில் பிரான்சின் ஜியோவானி வெற்றி பெற்று அடுத்த ஆட்டத்திற்கு முன்னேறினார்.
அரையிறுதி ஆட்டத்தில் அவர் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதவுள்ளார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)