ஈப்போ, 18 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளிக்கு இன்னும் இரண்டு் தினங்களே உள்ள வேளையில் பேராக், ஈப்போ லிட்டில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாள்களாக இங்கு மந்த நிலையில் காணப்பட்ட வியாபாரம் வாடிக்கையாளர்களின் வருகையால் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்று வியாபாரிகள் சிலர் நம்பிக்கை தெரிவித்தனர்.
“சுற்று வட்டார எல்லா இடங்களிலும் சந்தை நடத்தப்படுகிறது ஆனால் இங்கு வருகிறவர்கள் பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்கிறார்கள்,” என்று சுமதி சந்தனன் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் சிலரும் அங்குள்ள சூழ்நிலை குறித்து கருத்துரைத்தனர்.
"இன்று மழைக்காலமான சூழ்நிலையில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் விலைவாசி உயர்ந்திருந்தாலும் தமிழ் மக்கள் வந்து ஆதரிக்க வேண்டும்," என்று சுகுமாறன் கருப்பையாபிள்ளைக் கூறுனார்.
இவ்வாண்டு தீபாவளியை ஒட்டி ஈப்போ லிட்டல் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட குறு சிறு வணிகர்கள் தற்காலிக கடைகளை அமைத்துள்ளனர்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)