ஈப்போ, 30 அக்டோபர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் இந்தியர்களின் அடையாளத்தையும் வரலாற்றையும் மெய்பிக்கும் மிக முக்கியமான பகுதிகளில், Iஈப்போ லிட்டில் இந்தியாவும் ஒன்றாகும்.
பண்டிகை காலங்களில் தனித்துவ சிறப்புடன் மிளிரும் அப்பகுதி இவ்வாண்டு தீபாவளிக்கும் களைக்கட்டியுள்ளது.
வழக்கம் போல இவ்வாண்டும் ஈப்போ லிட்டல் இந்தியாவில் இறுதிக்கட்ட தீபாவளிப் பொருட்களை வாங்கும் நடவடிக்கையில் மக்கள் மும்முரமாகிவிட்டதைக் காண முடிந்தது.
ஒவ்வோர் ஆண்டைப் போல லிட்டல் இந்தியா வணிகர்கள் சங்கமே இத்தீபாவளி விற்பனை சந்தையை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
''கடந்த காலத்தைக் காட்டிலும் இம்முறை பல வியாபாரங்கள் சற்று தொய்வடைந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் பலரும் டிக் டோக்கில் பொருட்களையும் ஆடைகளையும் பலகாரங்களையும் வாங்கித் தொடங்கிவிட்டனர்,'' என்று பேராக் இந்திய வர்த்தகர் சபைத் தலைவர் ரவிஷங்கர் பாலசுப்ரமணியமும் ஜவுளி வியாபாரி இராஜேந்திரன் சுப்பையாவும் தெரிவித்தனர்.
இறுதிக்கட்ட பொருட்கள் வாங்குவது குறித்து பொதுமக்கள் சிலரும் தங்களின் கருத்தினைப் பகிர்ந்து கொண்டனர்.
''சில நாட்களுக்கு முன்னதாக இங்கு வந்திருந்தேன். அனைத்து பொருட்களும் விலை அதிகமாகவே இருந்தது. ஆனால் இன்று வந்து பார்க்கையில் பல பொருட்கள் மலிவாகவும் கேட்கின்ற விலைக்கும் கிடைக்கிறது. அதேபோல கடைசி நேரத்தில் பல புதிய வியாபாரங்களும் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று இளங்கோவன் இராமன், ஞானசேகரி, நளினி சுப்ரமணியம், இளஞ்செல்வன் எத்திராஜு ஆகியோர் தெரிவித்தனர்.
ஈப்போ லிட்டில இந்தியா வளாகம் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பாக சுற்றுப் பயணிகளையும் கவர்ந்திருந்தது.
தீபாவளி சந்தையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை பண்பாட்டு விழாவையும் காண திராளானோர் அங்கு ஒன்று கூடினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)