பொது

ஈப்போ அரசு சிகிச்சையகத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்

18/10/2025 07:13 PM

ஈப்போ, 18 அக்டோபர் (பெர்னாமா) -- பேராக், ஈப்போவில் உள்ள ஜார்ஜ் டவுன் அரசாங்க சிகிச்சையகத்தில் பணியாற்றும் இந்துப் பணியாளர்கள் மற்ற இன ஊழியர்களுடன் இணைந்து நேற்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சிறந்த முறையில் தங்களின் கைகளில் மருதானி இட்டுக் கொண்ட மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

"எல்லோரின் ஒற்றுமையைக் காக்கவும் நமது கலாச்சாரத்தைப் பிறருக்கு அறிமுகப்படுத்தவும் இந்தப் போட்டியை நடத்தினோம். அது சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முடிந்தது,” என்று ராஜேஸ்வரி லோகநாதன் தெரிவித்தார்.

மேலும், "போன வருடம் நாங்கள் கோலப்போட்டியை நடத்தினோம். இந்த வருடம் மருதானி போட்டியை ஏற்பாடு செய்தோம். பல இன மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்," என்று புவனேஸ்வரி இராஜேந்திரன் கூறினார்.

பணியின் இடையே, சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்ததாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டாக்டர்  தேன்மொழி பழனியப்பன்  கூறினார். 

ஜார்ஜ் டவுன் அரசாங்க சிகிச்சையகத்தில் சுமார் 199 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)