பொது

தீபாவளி குதூகலிப்பில் கிள்ளான் லிட்டல் இந்தியா

18/10/2025 08:04 PM

கிள்ளான், 18 அக்டோபர் (பெர்னாமா)--  தூர சொந்தங்களை ஒருங்கிணைத்து, மனதில் நீங்கா நினைவுகளை உருவாக்கி, ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் ஆனந்தத் திருநாளே தீபாவளியாகும்.

அத்திருநாளுக்கான முன்னேற்பாட்டு வேலைகளிலும், இறுதிக்கட்ட பொருட்கள் வாங்குவதிலும், பலர் இன்று மும்முரம் காட்டத் தொடங்கி இருப்பர்.

அந்த வகையில் சிலாங்கூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான, கிள்ளான், லிட்டில் இந்தியாவிலும் மக்கள் பரபரப்பாக பொருட்கள் வாங்கியதை பெர்னாமா செய்திகள் கண்டறிந்தது.

இம்மாதம் ஆறாம் தேதி முதல் 19 தேதி வரை 14 நாட்களுக்குக், கிள்ளான் Lorong Tingkat-ட்டில் மொத்தம் 135 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் சிறு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் திருசெல்வம் துரைசாமி தெரிவித்தார்.

"அடுத்து வரும் ஆண்டுகளில் அரசங்கத்தின் உதவியாலும் மஜ்லிஸ் பண்டாராயா  திராஜா கிளான் உதவியாலும் ஒரு எக்ஸ்போ அளவில் இந்த தீபாவளி சந்தையைக் கொண்டு செல்லும் முயற்சிகள் நடத்து கொண்டு இருக்கின்றன. பொதுமக்களுக்கான ஒரு அன்பான வேண்டுககோள் இது நமக்கான ஒரு சந்தை அடுத்த ஆண்டு கண்டிப்பாக வர வேண்டும்," என்றார் கிள்ளான் சிறு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் திருசெல்வம் துரைசாமி 

புதிய தருவிப்புகள் மற்றும் புதிய சிந்தனையிலான வர்த்தகத்தையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதாக வணிகர்களில் ஒருவர் தெரிவித்தார்

"வலக்கமாக நாங்கள் துணுக்காடலில் தான் வர்த்தகம் செய்வோம், இப்பொழுது நாங்கள் சந்தையில் வர்த்தகம் செய்தோம். மேலும் இது எங்களது புதல் முரை இவ்வாறு வர்த்தகம் செய்வது. எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,'' என்றார் சத்திய ராணி பிச்சைமுத்து

இதனிடையே, தமது அந்த காலத்து தீபாவளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் அஞ்சலைப் பெரியபையன்.

''எங்கள் கால தீபாவளி, தீபாவளி போன்றே தெரியாது, ஒரு வேலை சமைத்து, சாப்பிட்டு மறு நாள் வேளைக்குச் செல்வோம். ஒரு நாள் மட்டுமே விடுமுறை  தரப்படும். மறுநாள் வேளைத் தீபாவளி முடிந்தது. மேலும் இங்கு காலையிலிருத்து கூட்டம் இங்கு அதிகரித்துள்ளது,'' என்றார். 

மாலை நேரம் தொடங்கி, வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

பெர்னாமா  

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)