ஜாசின், 19 அக்டோபர் (பெர்னாமா) -- பாதுகாப்புத் திறன்களைப் புறக்கணிக்க, நாட்டின் தற்போதைய அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஒரு காரணமாக பயன்படுத்தக்கூடாது.
அமைதி நிலவிய காலங்களில் ஒழுக்கம் மற்றும் இராணுவத் தயார்நிலை அம்சங்களைப் புறக்கணித்ததன் மூலம் பல நாடுகள் பெரும் தவறுகளைச் செய்தன என்பதை உலக வரலாறு நிரூபித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''எல்லா சூழ்நிலைகளும் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். எனவே அவர்கள் பொருளாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்.எல்லாம் ஒழுங்காக இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அமைதியை அனுபவிக்கும் நாம் தயாரிப்பு, தயார்நிலை, ஒழுக்கம் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பதைப் புறக்கணிக்க வேண்டாம்'', என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை, மலாக்கா ஜாசினின் நடைபெற்ற மடானி மக்கள் நிகழ்ச்சியை நிறைவு செய்த போது அன்வார் அவ்வாறு கூறினார்.
2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் தற்காப்பு அமைச்சிற்கு இரண்டாயிரத்து 170 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறித்தும் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)