இந்தியா, 21 அக்டோபர் (பெர்னாமா)-- இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய மறுநாளான இன்று அதன் தலைநகர் புது டெல்லியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், காற்றின் தூய்மைக்கேடு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
புது டெல்லியில் உள்ள கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் திங்கட்கிழமை இரவு வரை பட்டாசுகளை வெடித்ததைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
பருவகால தூய்மைக்கேடு மற்றும் நிலையற்ற வானிலைக்கு மத்தியில் இந்த மோசமான புகையும் சேர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அந்நகரில் பல பகுதிகளில் காற்று தூய்மைக்கேட்டு குறியீடு 350-ஐ கடந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அதிகபட்ச அளவின்படி இது கடுமையானதாகவும் சுவாசிக்க ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.
அங்குள்ள வீதிகளை மோசமான புகை சூழ்ந்துள்ளதால் பெரும்பாலான அடையாளச் சின்னங்கள் உயரமான கட்டிடங்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை.
தீபாவளியின் போது புது தில்லியில் பட்டாசு வெடிப்பதற்கான முழுமையான தடைக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தளர்வு வழங்கியது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)