புத்ராஜெயா, 22 அக்டோபர் (பெர்னாமா ) -- மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கான முயற்சிகள், நல்லாட்சி, நேர்மை மற்றும் ஊழலை எதிர்ப்பதன் மூலம் தொடங்க வேண்டும்.
தாம் தொடங்கிய மடானி கட்டமைப்பு தற்போதுள்ள ஒவ்வொரு நிர்வாக ஏற்பாட்டிலும் நல்லாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"நம்மையும் நம் குடும்பங்களையும் காப்பாற்றிக் கொள்ள நம் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய நம் அன்புக்குரிய நாடான மலேசியாவின் மகத்துவத்தை உறுதி செய்ய விரும்பினால், நாம் நல்லாட்சி, நேர்மை மற்றும் ஊழலை எதிர்ப்பதில் இருந்து தொடங்க வேண்டும். ஏனெனில் உயர் நிலையிலானவர்களிடையே உள்ள செயல்முறை எளிதானது அல்ல," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நல்லாட்சி என்பது அரசியல் நலன்களின் அடிப்படையில் அல்லாமல் அனைத்து மாநிலங்களின் நிர்வாகம் முழுவதும் நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி முழுமையான பார்வையுடன் பார்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தேசிய நெறிமுறை, விருது, நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)