பொது

ஆறு துணை அமைச்சர்களும் ஒரு புதிய முகமும் முழு அமைச்சர்களாக நியமனம்

16/12/2025 07:29 PM

கோலாலம்பூர், டிசம்பர் 16 (பெர்னாமா) -- இன்று அறிவிக்கப்பட்ட மடானி அரசாங்க அமைச்சரவை மாற்றத்தில் ஆறு துணை அமைச்சர்களும் ஒரு புதிய முகமும் முழு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

11 அமைச்சுகளை உள்ளடக்கி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜோஹாரி புதிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தலைவர் தான் ஶ்ரீ ஜோஹாரி அப்துலின் மகனுமான முஹமட் தௌஃபிக்கின் நியமனம் புதிய கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹன்னா யோவிற்குப் பதிலாக அமைந்துள்ளது.

நிக் நஸ்மி நிக் அஹ்மட்டிற்குப் பதிலாக இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சராக டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குரோப் நியமிக்கப்பட்டார்.

மிரி நாடாளுமன்ற உறுப்பினர் சியூ சூன் மான் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சராகவும் யுவனேஸ்வரன் ராமராஜ் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை துணை அமைச்சராகச் சிம் ட்சே ட்சினும் பொருளாதார துணை அமைச்சராக டத்தோ முஹமட் ஷஹர் அப்துல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மோர்டி பிமோல், இளைஞர் மற்றும் விளையாட்டு துணை அமைச்சராகவும் சையத் இப்ராஹிம் சையத் நோஹ் இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

மற்றொரு நிலவரத்தில், மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார் மற்றும் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தபா ஆகியோர் புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஒருமைப்பாட்டு துணை அமைச்சராகச் சேவையாற்றிய செனட்டர் சரஸ்வதி கந்தசாமியும் புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)