ஜப்பான், 23 அக்டோபர் (பெர்னாமா)-- Pan Pasifik மகளிர் டென்னிஸ் போட்டி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ்சைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார் விம்பிள்டன் வெற்றியாளரான எலினா ரைபகினா
தோக்கியோவில் நடைபெற்று வரும் இத்தொடரில் கசக்ஸ்தானின் இரண்டாம் நிலை வீராங்கனையான எலினா ரைபாகினா 6-4 6-3 என்ற நேரடி செட்களில் Leylah
லெய்லா பெர்னாண்டஸ்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 28 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த மாதம் நடைபெறும் WTA இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு ரைபாகினாவுக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவைபடுகிறது.
காலிறுதியில் அவர் கனடாவின் புதிய நம்பிக்கையான விக்டோரியா எம்போகோ உடன் களம் காணவிருக்கிறார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)