வியன்னா ஆஸ்திரியா, அக்டோபர் 24, (பெர்னாமா) -- ஆஸ்திரியா வியென்னா பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு இத்தாலியின் யென்னிக் சின்னர் முன்னேறினார்.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், அவர் தமது சக நாட்டவரான ஃபிலாவியோ கொபொலியைத் தோற்கடித்து அடுத்த சுற்றில் கால் வைத்தார்.
உலகின் இரண்டாம் நிலையில் இருக்கும் யென்னிக் சின்னர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பயனாக 6-2 7-6 எனும் நிலையில், அவர் இரு செட்களையும் வென்று ஃபிலாவியோ கொபொலியையை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில், ஜெர்மனியின் அலெக்சேண்டர் சிவிரெப்வும் வெற்றிகரமாக காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வானார்.
2021-ஆம் ஆண்டு Vienna பட்டத்தை வென்ற சிவிரெப், இத்தாலியின் மத்தெயொ அர்னால்டியை 6-4 6-4 என்று நேரடி செட்களில் வீழ்த்தினார்.
இதனிடையே, உலகின் ஆறாம் நிலை ஆட்டக்காரரார் டானில் மெட்வெடேவின் பயணம், இந்த ஆட்டத்தோடு முடிவடைந்தது.
அமெரிக்கா பொது டென்னி பட்டத்தை வென்ற முன்னாள் வெற்றியாளரான அவர், இவ்வாட்டத்தில் 7-6, 6-4 என்ற புள்ளிகளில் பிரான்சின் கொரெந்தின் மெளதெட்டிடம் தோல்வி கண்டார்.
மெளதெட் அடுத்த சுற்றில் அவர், இத்தாலியின் லொரென்சோ முசெத்தி உடன் மோதுகின்றார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)