ஜாலான் பினாங், 24 அக்டோபர் (பெர்னாமா) -- ஆசியான் இலக்கவியல் பொருளாதார கட்டமைப்பு ஒப்பந்தம் DEFA தொடர்பான பேச்சுவார்த்தைகள் 70 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளன.
உலகளாவிய இலக்கவியல் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் வட்டாரத்தின் நிலையை வலுப்படுத்தி ஆசியானின் கூட்டு முயற்சிகளை ஒன்றாகத் தொடர ஒரு வியூக வரைபடமாக செயல்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையாக 2026ஆம் ஆண்டுக்குள் DEFA ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு ஆசியான் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் MITI அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
''இந்த ஆண்டு எங்கள் இலக்கு 70 விழுக்காடு பேச்சுவார்த்தைகளை கணிசமாக முடிப்பதாகும். தற்போதைக்கு 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக முடித்து விட்டோம்,'' என்று டத்தோ ஶ்ரீ தெங்கு சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
இம்மாதத் தொடக்கத்தில் 14வது DEFA பேச்சுவார்த்தைச் செயற்குழு கூட்டத்தின் வழியாக அடையப்பட்ட முன்னேற்றத்தில் ஆசியான் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்ததாகத் தெங்கு சஃப்ருல் கூறினார்.
பகிரப்பட்ட முன்னேற்றத்தை அடைவதற்கான உறுப்பு நாடுகளின் வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கும் பல்வேறு உறுதியான முடிவுகளும் அதில் எடுக்கப்பட்டதாகவும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)