விளையாட்டு

சூப்பர் லீக்; கிளந்தானுக்கு மூன்றாவது வெற்றி

25/10/2025 04:03 PM

கிளந்தான், 25 அக்டோபர் (பெர்னாமா)-- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் கிளந்தான் யுனைடெட் தனது சொந்த இடத்தில் மலாகா FC-யை தோற்கடித்து மூன்று புள்ளிகளைப் பெற்றது. இந்தப் பருவத்தில் களம் கண்ட ஏழு ஆட்டங்களில் கிளந்தானுக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.

நேற்றிரவு கோத்தா பாருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிளந்தானின் முதல் கோல் 36-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.அந்த கோலோடு முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற நிலையில் முடிந்த வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க மலாகா FC போராடியது.

ஆயினும் வெற்றி வாய்ப்பு கிளந்தானுக்குச் சாதகமானதில் அதன் இரண்டாது கோல் முஹாமட் டேனியல் ஹக்கிம் வழி 88--வது நிமிடத்தில் போடப்பட்டது. மலாகா FC-யின் ஒரே கோல் பினால்டியின் மூலம் ஆட்டத்தின் இறுதியில் அடிக்கப்பட்டு ஆட்டம் 1-2 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)