பொது

ஆசியான்47: ஏ.ஐ பாதுகாப்பு வலையமைப்பின் முன்முயற்சி குறித்து அன்வார் விளக்கம்

26/10/2025 02:10 PM

கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவில், ஆசியானை உட்படுத்திய செயற்கை நுண்ணறிவான AI, பாதுகாப்பு வலையமைப்பின் முன்முயற்சி குறித்தும், டத்தோ ஶ்ரீ அன்வார் பேசினார்.

ஆசியான் வட்டாரம் முழுவதும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் நெறிமுறைகள், பாதுகாப்பு மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதை இப்பாதுகாப்பு வலையமைப்பு, நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.

"தொழில்நுட்பமானது நமக்கு முதலாளியாக இல்லாமல், நமது பணியாளராக இருப்பதை உறுதி செய்வதற்காக, செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டில் நெறிமுறைகள், பாதுகாப்பு மற்றும் சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் ஆசியான் ஏ.ஐ பாதுகாப்பு வலையமைப்பை (AI SAFE) நிறுவவிருக்கிறோம்," என்றார் அவர்.

இன்று நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவில், ஆசியானை உட்படுத்திய செயற்கை நுண்ணறிவான AI, பாதுகாப்பு வலையமைப்பின் முன்முயற்சி குறித்தும், டத்தோ ஶ்ரீ அன்வார் பேசினார்.

ஆசியான் வட்டாரம் முழுவதும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் நெறிமுறைகள், பாதுகாப்பு மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதை இப்பாதுகாப்பு வலையமைப்பு, நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தமதுரையில் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)