விளையாட்டு

இரு வெவ்வேறு இடங்களில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா

28/10/2025 05:14 PM

இத்தாலி, 28 அக்டோபர் (பெர்னாமா) -- குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அப்போட்டியின் தொடக்க விழா இத்தாலியில் உள்ள இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

2026-ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு மிலான் மற்றும் கொர்டினா தலைமையேற்றாலும் சன் சிரோ அரங்கிலேயே அதிகமான விளையாட்டு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு துரின் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி கடைசியாக ஏற்று நடத்தியிருந்தது.

வேற்றுமையில் ஒற்றுமை எனும் கிரேக்க தத்துவத்தை முன்னிருத்தி அடுத்த ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று இத்தாலி தெரிவித்திருக்கிறது.

இம்முறை போட்டியில் முதல்முறையாக இரு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும்.

இந்த 25-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 6 தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]