கோலாலம்பூர், அக்டோபர் 26 (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் வழி, பிஃபா ஆசியான் கிண்ணம் எனும் புதிய காற்பந்து போட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாடின் மூலம் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதோடு வட்டார காற்பந்து வளர்ச்சியை வலுப்படுத்துவத்துவது அது நோக்கமாகக் கொண்டுள்ளதாக அனைத்துலக காற்பந்து சம்மேளம் பிஃபாவின் கியானி இன்பான்ஃடினோ தெரிவித்துள்ளார்.
அனைத்து 11 ஆசியான் உறுப்புநாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய தொடர் வட்டாரத்தின் காற்பந்து தரத்தை உயர்த்துவதற்கும் ஆட்டக்காரர்கள் அனைத்துலக ரீதியில் போட்டியிடும் வாய்ப்புகளை பெறுதற்கும் முக்கிய தளமாக இருக்கும் என்று கியானி இன்பான்ஃடினோ கூறினார்.
இந்தப் புதிய போட்டி பிஃபா மற்றும் ஆசியான் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
இன்று நாங்கள் இணைந்து ஒரு புதிய போட்டியைத் தொடங்கிறோம். ஒரு புதிய பிஃபா போட்டி, பிஃபா-ஆசியான் கிண்ணம். 11 நாடுகளுடன் இணைந்து நாங்கள் இந்தப் வட்டாரத்திற்காக அதனை உருவாக்குகிறோம்.
மேலும், ''பிஃபாவின் அனைத்துலக போட்டி கட்டமைப்பில் சிறந்த வீரர்களுடன் காற்பந்திற்கு உண்மையான ஊக்கத்தை அளிக்கவும், வட்டாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் பிரகாசிக்கவும் இந்தப் போட்டியைத் தொடங்குகிறோம்,'' என கியானி இன்பான்ஃடினோ தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற பிஃபா-ஆசியான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியார்களிடம் அதனைத் தெரிவித்தார்.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)