வியன்னா, 27 அக்டோபர் (பெர்னாமா) - வியன்னா பொது டென்னிஸ் போட்டியில் கிண்ணம் இத்தாலியின் யென்னிக் சின்னருக்கு சொந்தமானது.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், அவர் ஜெர்மனியின் அலெக்செண்டர் ஸ்வெரெவ்வுடன் மோதினார்.
முதல் செட்டில் 3-6 என்ற புள்ளிகளில் ஜென்னிக் சின்னர் தோல்வி கண்டாலும், அடுத்த இரு செட்களிலும் அவர் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
அதன் பலனாக மீதமுள்ள இரு செட்களை 6-3 7-5 என்ற புள்ளிகளில் கைப்பற்றி, 24 வயதான சின்னர் கிண்ணத்தை தன் வசமாக்கினார்.
இந்த ஆட்டம், இரண்டு மணி நேரம் 28 நிமிடங்கள் வரை நீடித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)