கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா)-- 2026-2030 மலேசியா பராமரிப்பு செயல் திட்டம் மற்றும் வியூக கட்டமைப்பின் வழி பராமரிப்பு தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு KPWKM உருவாக்கி வருகிறது.
இந்நடவடிக்கை முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய துறையை வலுப்படுத்தும் முயற்சியாகும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
நவம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் KPWKM ஏற்பாடு செய்யவிருக்கும் ஆசியான் அளவிலான 'The New Frontiers in The Care Economy' மாநாட்டில் இந்த வியூக கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் பராமரிப்புத் துறை நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் ஈடுபாட்டுடன் 'Whole of Nation' எனப்படும் 'முழு நாடு' அணுகுமுறையைப் பயன்படுத்தி இந்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
“இந்த திட்டத்தின் மற்றும் நடவடிக்கைத் உருவாக்கமும் அரசு வணிகத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட தேசிய வயோதிகம்நடவடிக்கைத் திட்டத்துடன் (NAB) ஒத்துவருகிறது, இதில் குறிப்பாக நீண்டகால பராமரிப்பு தொடர்பான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.” என்றார்
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி
இன்று மக்களவையில் மலேசியாவில் பராமரிப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து, பாதாங் லூபூர் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஷஃபிசான் கிப்லீ எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ நேன்சி அவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)