கோலாலம்பூர், 28 அக்டோபர் (பெர்னாமா) -- 1974-ஆம் ஆண்டு முதல், இவ்வட்டாரத்துடன் நீண்டகால கூட்டாண்மையைத் தொடர்ந்துவரும் தனது முதல் உரையாடல் பங்காளியான ஆஸ்திரேலியாவுக்கு, ஆசியான் நன்றி பாராட்டியது.
வட்டார ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்த ஆஸ்திரேலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கு குறித்தும், ஐந்தாவது ஆசியான் - ஆஸ்திரேலிய உச்சநிலை மாநாட்டிற்கு தலைமையேற்ற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
5-வது ஆசியான்-ஆஸ்திரேலிய உச்சநிலை மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அன்வார், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டாண்மையை வழிநடத்துவது மட்டுமின்றி மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளையும் கண்டறியவும் ஒரு மதிப்புமிக்க தளமாகவும் இது அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)