பொது

சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா

29/10/2025 07:49 PM

பேரா, 29 அக்டோபர் (பெர்னாமா) -- கம்போங் கபாயாங்கில் உள்ள, 129 ஆண்டு காலம் பழைமை வாய்ந்த ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் கந்த சஷ்டி சிறப்புடன் நடைபெற்று முடிந்தது.

பேரா மாநிலத்தின் இரண்டாவது பெரிய முருகன் ஆலயமான இங்கு, கந்த சஷ்டியை
முன்னிட்டு இம்மாதம் 22-ஆம் தேதியில் இருந்து ஆறு நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வேளையில், சூரசம்ஹாராத்தைக் காண சுமார் நான்காயிரம் பக்தர்கள் ஒன்று கூடினர்.

சூரபத்மன் எனும் அரக்கனை, முருகப் பெருமான் அழித்து போரில் வெற்றி பெற்றதை நினைவுகூரும் விதமாக கந்த சஷ்டி விழா முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாட்டப்படுகிறது.

அதற்காக பக்தர்கள் உபவாசம், பிரார்த்தனை, பூஜை போன்றவறை மேற்கொண்டு நல்லது தீமையை எப்போது வெல்லும் தத்துவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

சூரபத்மன் தேவர்களைத் துன்புறுத்தியபோது, அவர்களைக் காக்க முருகப்பெருமான் அவனை வதம் செய்த சூரசம்ஹார காட்சியை, இவ்வாலயத்தில் இடம் பெற்றது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்ததாக ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயப் பொருளாளர் பொன் .விக்ரமன் கூறினார்.

மேலும், அன்று போலீஸ் அதிகாரிகளின் சிறப்பு பூஜையும் நடைபெற்றதாக நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பணி ஒய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி டத்தோ சுரேஷ்குமார் கூறினார்.

இந்த ஆலயத்தில் கடந்த 21 ஆண்டு காலமாக போலீசாரின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)