கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா)-- மலேசியா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் ஏ.ஆர்.டி உடன் தொடர்புபடுத்தப்பட்ட கொள்முதல் கடப்பாட்டிற்கும் அரசாங்க செலவினங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI தெளிவுப்படுத்தியது.
வாஷிங்டனிடம் இருந்து அரசியல் அழுத்த கூறுகள் எதுவும் இல்லை என்றும் இந்த வணிக கொள்முதல் எதிர்காலத்தில் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
ART பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னதாக நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட பன்னாட்டு நிறுவனம் MNC மற்றும் அரசு தொடர்புடைய நிறுவனங்கள், GLC ஆகியவற்றின் கொள்முதல் திட்டங்கள், கையகப்படுத்தும் எண்ணிக்கையை குறிப்பதாக சஃப்ருல் கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம், நாடாளுமன்றத்தில் இதே விளக்கத்தை அவர் செய்திருந்தார்.
"உதாரணத்திற்கு போயிங் விமானம் வாங்குவதாக இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இது டிரம்பின் வரி அறிவிப்பின் தேதிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. பெட்ரோனாஸ் பரிந்துரைத்த எல்.என்.ஜி கொள்முதல் விவகாரத்திலும் இதுதான் உண்மை. பெட்ரோனாஸ் நீண்ட காலமாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து எல்.என்.ஜி-ஐ வாங்கி வருகிறது. வரி அறிவிப்பிற்கு முன்னதாகவே, பெட்ரோனாஸ் அமெரிக்காவில் இருந்து எல்.என்.ஜி-ஐ வாங்கியிருக்கிறது. ஆனால், நாங்கள் பெட்ரோனாசில் வேலை செய்யாததால், ஒரு அறிவிப்பைக் கேட்டவுடன் இது புதிது அல்ல..." என்றார் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் .
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)