பொது

மலேசியா - அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம்; வர்த்தக இறையாண்மையை ஒப்படைக்கவில்லை

30/10/2025 02:37 PM

ஜாலான் பார்லிமன், 30 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்காவிலிருந்து நாட்டிற்கு அதிக முதலீடு மற்றும் வர்த்தகம் தேவை என்பதால் மலேசியா - அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பிரிவு உள்ளதால் நாட்டின் வர்த்தக இறையாண்மையை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான எந்தவொரு பிரச்சினையும் எழவில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்திலும் வெளியேறும் பிரிவுகள் உள்ளன. நாம் ஏன் அவற்றில் கையெழுத்திட்டோம்? அமெரிக்காவுடன் அதிக முதலீடு மற்றும் வர்த்தகம் நமக்குத் தேவை என்பதே காரணம். நான் அதற்காக மன்னிப்பு கேட்க விரும்பவில்லை." என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கையெழுத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில் உள்ள உட்பிரிவுகள் சீனாவுடனான ஒத்துழைப்பின் சாத்தியத்தை ரத்து செய்யுமா என்பது குறித்து அந்நாட்டுத் தரப்பினரால் ஆராயப்பட்டு வருவதாக நிதி அமைச்சருமாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)