பிலிப்பைன்ஸ், 4 நவம்பர் (பெர்னாமா) -- மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி சூறாவளி திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியதோடு, அதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
இச்சூறாவளியினால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில், இரண்டு கிராமங்களில் குடியிருப்பாளர்கள் கூரைகளில் சிக்கிக்கொண்டதோடு கார்களும் நீரில் மூழ்கின.
தெற்கு லெயிடின் கிழக்கு மாகாணத்தில் உள்ள Silago நகரில் நள்ளிரவில் கரையைக் கடந்த இச்சூறாவளியினால் வெள்ளத்தில் மூழ்கி ஒரு முதியவர் உயிரிழந்தார்.
மேலும், அந்த மாகாணம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் மத்திய போஹோல் மாகாணத்தில் மரம் சாய்ந்ததில் மற்றொரு கிராமவாசி உயிரிழந்ததாக்வும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, கிழக்கு Samar மாகாணத்தில், கடுமையான காற்றினால் கூரைகளை பறந்த வேளையில், ஹொமொன்ஹொன் தீவில் சுமார் 300 குடிசைகள் சேதமடைந்தன.
ஆனால், உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)