பஞ்சாப், 6 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் வழி பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு பிறகு அவ்விரு நாட்டு மக்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியாவை சேர்ந்த சீக்கியர்கள் வழிபாடு நடத்தினர்.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள நன்கனா சஹீப் நான்கானா சாஹிப்பிற்கு சென்று வழிப்பட பாகிஸ்தான் உள்துறை அமைச்சு, இந்தியாவைச் சேர்ந்த 2,100 பக்தர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.
இவர்களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றனர்.
குருநானக் தேவ்-இன் 556-வது பிறந்த தினத்தை ஒட்டி, இந்த சிறப்பு வழிப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
பக்தர்களுக்கு 10 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள பல வரலாற்று சீக்கிய கோயில்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ மோதலுக்கு பிறகு இரு நாடுகள் இடையே முதல் மக்கள் தொடர்பு நடவடிக்கை இதுவாகும்.
1469-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானின் லாகூருக்கு அருகிலுள்ள தல்வண்டி எனும் சிறிய கிராமத்தில் குருநானக் தேவ் பிறந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)