ரியாத், 6 நவம்பர் (பெர்னாமா) -- சவூதி அரேபியா ரியாத்தில் நடைபெற்று வரும் WTA குழுநிலை டென்னிஸ் போட்டியில் கசக்ஸ்தான் வீராங்கனையான எலெனா ரிபகினா தோல்வியற்ற சாதனையைத் தற்காத்துக் கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அவர் எகதெரினா அலெக்சாந்த்ரோவாவை நேரடி செட்களில் வீழ்த்தினார்.
குழு நிலையிலான இந்தப் போட்டியில் மேடிசன் கீஸ் மற்றும் மிர்ரா ஆந்த்ரேவா
ஆகிய இருவரும் சுகாதார பிரச்சனை காரணமாக விலகிக் கொள்ள இறுதி நிமிடங்களில் மாற்று ஆட்டக்காரராக எகதெரினா அலெக்சாந்த்ரோவா பங்கேற்றார்
இதற்கு முந்தைய ஆட்டங்களில், அமாண்டா அனிசிமோவா மற்றும் இகா ஸ்வியான்டெக் ஆகிய இருவரைத் தோற்கடித்து எலெனா ரிபகினா கவனம் ஈர்த்திருந்தார்.
ஆனால், இந்த ஆட்டத்தில் அவர் அலெக்சாந்த்ரோவாவிடம் இருந்து கடுமை போட்டியைச் சந்திக்க வேண்டி இருந்தது.
ஆயினும் 6-4, 6-4 எனும் புள்ளிகளில் ரிபகினா இரு செட்களை போராடி வென்றார்.
நாளை வெள்ளிக்கிழமை, நடைபெறவிருக்கும் அரையிறுதி சுற்றில் அவர், அரினா சபலென்கா ஜெசிகா பெகுலா அல்லது கோகோ காஃப் ஆகிய மூவரில் ஒருவருடன் போட்டியிடுவார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)