விளையாட்டு

புதிய விளையாட்டாளர்களுடன் களமிறங்க ஏரன் சியா தயார்

07/11/2025 10:57 PM

கோலாலம்பூர், நவம்பர் 07 (பெர்னாமா) -- புதிய விளையாட்டாளர்கள் உடன் களமிறங்கத் தேசிய பூப்பந்து இரட்டையர் விளையாட்டாளர்களில் ஒருவரான ஏரன் சியா தயாராக உள்ளார்.

அடுத்த ஆண்டு டிசம்பரில், தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் 2025-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தமது இலக்கில், எந்தவொரு விளையாட்டாளர் உடன் இணைந்து விளையாடத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

''சீ விளையாட்டில் வூய் யிக்-உடன் தங்கப் பதக்கம் வென்றேன் என்று நினைக்கிறேன். பின்னர், இந்த முறை ஒரு வலுவான அணி சீ விளையாட்டிற்குச் சென்றது. நாங்கள் குழு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், சீ விளையாட்டில், தனிநபர் மட்டுமின்றி ஜோடியாக விளையாட முயற்சி செய்யலாம், அது எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். நாங்களும் பயிற்சியாளரிடம் விவாதித்துள்ளோம். ஜோடியாக விளையாடலாம். ஏனெனில், சீ விளையாட்டில் உலகத் தர விளையாட்டாளர்கள் பங்கேற்கவில்லை,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் இந்த விளையாட்டுப் போட்டியில் மலேசியா வலிமையான அணிகளில் ஒன்றாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த முயற்சி ஒரு நேர்மறையான அடைவு நிலையை அளிக்கும் என்று ஏரன் சியா நம்பிக்கை தெரிவித்தார்.

பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஏரன், இம்முறை தமது சகாவான சொ வூய் யிக்குடன் ஜோடி சேருவார் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஒன்றாகக் களமிறங்குவது பயிற்சியாளரின் இறுதி முடிவை பொருத்தது.

2021-ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில், மலேசியா பூப்பந்து விளையாட்டில் கடைசியாக தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)