வட ஜகார்த்தா, 7 நவம்பர் (பெர்னாமா) -- வெள்ளிக்கிழமை வட ஜகார்த்தாவின் 72 கெலாபா காடிங்கில் உள்ள மாநில உயர்நிலைப் பள்ளியின் மசூதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் சிறியவர்கள் முதல் பதின்ம வயதினர் வரை காயமடைந்ததாக ஜகார்த்தா மெட்ரோ ஜயா போலீஸ் தலைவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசெப் எடி சுஹேரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில், 54 பேர் காயமடைந்தனர். சிலர் சொற்ப காயங்களுக்கு ஆளான வேளையில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக எடி சுஹேரி கூறினார்.
அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவ மத்திய ஜகார்த்தாவில் உள்ளயார்சி மருத்துவமனை மற்றும் செம்பாகா பூதே இஸ்லாமிய மருத்துவமனையில் அவசரகால இடங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)