பெர்லின், 09 நவம்பர் (பெர்னாமா) -- தொடர்வது பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி குறித்த செய்தி.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெயர்ன் முனிக்கின் ஹெரி கேன் அடித்த இறுதி நிமிட கோல் தமது அணியை யூனியன் பெர்லினுடன் 2 - 2 என்ற கோல்களில் சமநிலை காண உதவியது.
பெர்லினில் நடைபெற்ற இவ்வாட்டத்ன் முதல் கோலை யூனியன் பெர்லினின் டானில்ஹோ டோகி 27வது நிமிடத்தில் அடித்தார்.
அதனை தொடர்ந்து ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் லூயிஸ் டயஸ் பெயர்ன் முனிக்கின் முதல் கோலை அடித்து முதல் பாதி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே வெற்றி கோலை தேடிய வேளையில் டானில்ஹோ டோகி 83வது நிமிடத்தில் யூனியன் பெர்லினுக்கு மேலும் ஒரு கோலை பெற்று தந்தார்.
ஆட்டம் யூனியன் பெர்லினிக்குச் சாதமாக நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வேளையில் 90வது நிமிடத்தில் ஹெரி கேன் பெயர்ன் முனிக் அணிக்கு இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)