கூச்சிங், 10 நவம்பர் (பெர்னாமா) -- எஃப்.ஏ கிண்ண காற்பந்து போட்டி நடப்பு வெற்றியாளரான ஜோகூரின் ஜே.டி.தி வெற்றிகரமாக இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பைப் பிரகாசமாக்கி கொண்டுள்ளது.
நேற்றிரவு சரவாக்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அது 2 - 1 எனும் நிலையில் எஃப்.ஏ நகரத்தில் எஃப்சியை அதன் சொந்த அரங்கில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜே.டி.தி அதன் முதல் கோலை 36வது நிமிடத்தில் போட்டது.
அதோடு, முதல் பாதி ஆட்டம் முடிவடைய இரண்டாம் பாதி ஆட்டம் இன்னும் விறுவிறுப்பானது.
முதல் கோல் போட்டு கவனம் ஈர்த்த ஜே.டி.தியின் இறக்குமதி ஆட்டக்காரரான பெர்க்சன் டா சில்வா 49வது நிமிடத்தில் இரண்டாம் கோலையும் அடித்தார்.
சொந்த அரங்கில் ஜே.டி.தியுடன் தொடர்ந்து போராடிய கூச்சிங் நகரம் தனது ஒரே கோலை 68வது நிமிடத்தில் போட்டது.
ஆட்டத்தைச் சமன் செய்ய கூச்சிங் நகரம் தொடர்ந்து முயற்சித்த போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இப்போட்டியின் இரண்டாம் அரையிறுதி ஆட்டம் இம்மாத இறுதியில் ஜோகூரின் சொந்த இடத்தில் நடைபபெறவிருக்கிறது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)