பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 01 (பெர்னாமா) -- எஃப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்குக் கணித்தது போலவே ஜோகூரின் ஜெ.டி.தி முன்னேறியுள்ளது.
சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான அது 2-0 என்ற கோல் கணக்கில் கூச்சிங் சிட்டியைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால் வைத்தது.
இந்த ஆட்டத்தில் ஜேடிதியின் முதல் கோல் ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அதன் கோல் மன்னன் பெர்க்சன் டா சில்வா வழி அடிக்கப்பட்டது.
இரண்டாவது கோல் ஸிஸ்கோ முனோஸ் மூலம் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 82வது நிமிடம் போடப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஜெ.டி.தி அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றியாளர் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.
இதனிடையே சிலாங்கூர் எஃப்.சியை 5-4 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி சபா எஃப்.சியும் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வானது.
நேற்றைய ஆட்டத்தில் அவ்விரு அணிகளும் 3-3 என்று சமநிலை அடைந்த போதிலும் மொத்த கோல் எண்ணிக்கையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி சபா ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)