பாங்கி, 13 நவம்பர் (பெர்னாமா) -- சபாவிற்கு 40 விழுக்காடு சிறப்பு வருவாய் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனும் முடிவு அம்மாநிலத் தேர்தலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
தமது தலைமையில் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப்புடன் நடத்தப்பட்ட பல்வேறு கூட்டங்களின் விளைவாக இக்கூட்டு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
''அதனால்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் வாதிடுகிறோம், உண்மையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 60 கோடி ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளோம். இது மிகப் பெரிய முன்னேற்றம். நாங்கள் தீர்ப்பில் உள்ள சிக்கல்களை ஏற்றுக்கொண்டோம். அதை செய்யாவிட்டால் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன. நானே கூச்சிங், கோத்தா கினபாலு, கோலாலம்பூரில் தலைமையேற்றேன்,'' என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)