குமாமாடோ, 14 நவம்பர் (பெர்னாமா) -- குமாமாடோ மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் மகளிர் இரட்டையர் பெர்லி தான் – எம்.தினா தேர்வாகினர்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை இரட்டையரான அந்த ஜோடி, தைவானுடன் மோதியது.
தைவானின், ஷு ஹின் ஹூய் – லி ஜே யூன் ஜோடியுடன் மோதிய பெர்லி தான் – எம்.தினா, 21-13, 21-17 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றனர்.
இந்த ஆட்டம் 30 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தது.
அடுத்த ஆட்டத்தில், பெர்லி தான் – தினா ஜோடி, ஜப்பானின் யூகி ஃபூக்குசிமோ – மாயூ மட்சுமோதோ அல்லது தைவானின் ஷு ஹின் ஹூய் – லி ஜே யூன் உடன் மோதவுள்ளனர்.
ஆடவருக்கான பிரிவில், நாட்டின் கோ ஸெ ஃபெய் – நூர் இசுடின் ரும்சனி ஜோடி, தைவான் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் 21-16, 10-21, 21-16 என்ற புள்ளிகளில் மலேசியரகள் வெற்றி பெற்றனர்.
அடுத்த ஆட்டத்தில் அவர்கள் ஜப்பான் ஜோடியுடன் மோதவுள்ளனர்.
இதனிடையே, உலக வெற்றியாளரான தாய்லாந்தின் ரச்சனோக் இனதோன் உடன் விளையாடிய தேசிய மகளிர் ஒற்றையர் பூப்பந்து வீராங்கனை, வோங் லிங் சிங் 17-21, 9-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)