கோத்தா கினபாலு, 15 நவம்பர் (பெர்னாமா) -- கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சபாவின் வருவாயில் 40 விழுக்காட்டை அம்மாநிலத்திற்கு வழங்கும் கோரிக்கை தொடர்பாக அதன் உரிமைகளை நிறைவேற்ற மத்திய அரசாங்கம் உறுதி கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அது தொடர்பாக அடுத்த திங்கட்கிழமை தொடங்கி வழக்கமான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைச் செயல்முறை தொடரும் என்று அவர் கூறினார்.
இச்செயல்முறை கருவூல தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் உட்பட மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அதிகாரிகளும் சபா அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடகியது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
"அமைச்சரவையையும் மத்திய அரசையும் பிரதிநிதிக்கும் பிரதமர் என்ற முறையில் 40 விழுக்காட்டைப் பற்றி நாங்கள் மேல்முறையீடு செய்யவில்லை என்பதை நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். அது சபாவின் உரிமை," என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.
கோத்தா கினாபாலுவில் உள்ள அனைத்துலக தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் ITCCஇல் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)