கோத்தா கினாபாலு, 16 நவம்பர் (பெர்னாமா) -- சபா, சரவாக் மாநிலங்களின் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கான நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுவரை அவ்விரு மாநிலங்களின் நாடாளுமன்ற மொத்த தொகுதிகளை மூன்றில் ஒரு பங்காக உயர்த்துவதற்கு எந்த உறுதிபாடும் இல்லை என்றாலும் அவற்றை அதிகரிக்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் MA63ஐ செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் தொகுதி அதிகரிப்பும் இருந்ததாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
''ஒரு கொள்கையாக நாங்கள் அவற்றை அதிகரிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் சொன்னேன். ஆனால் எண்கள் எஸ்.பி.ஆரைப் பொறுத்தது. எனினும் அதிகரிக்க ஓர் உறுதிப்பாடு உள்ளது. சபா மற்றும் சரவாக் மாநில வழக்கறிஞர்கள் மற்றும் தேசிய சட்டத்துறை தலைவர் ஆகியோரிடம் முதலில் அதை தீர்க்குமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இன்று சபா, கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)