பொது

ஜி.ஆர்.எஸ்: தேர்தல் கொள்கையறிக்கை வெளியிட்டது

17/11/2025 07:30 PM

கோத்தா கினபாலு, 17 நவம்பர் (பெர்னாமா) -- “Rumah Kita, Kita Jaga” என்ற கொள்கை அடிப்படையில் Memacu Sabah Maju, Rakyat Berkemajuan என்ற கருப்பொருளுடன் 17வது சபா மாநிலத் தேர்தலுக்கான சபா மக்கள் கூட்டணி ஜி.ஆர்.எஸ் கட்சியின் தேர்தல் கொள்கையறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

Sabah First, Sabah Forward, Sabah Prosper மற்றும் Sabah United ஆகிய நான்கு முக்கிய கூறுகளை அந்த தேர்தல் கொள்கையறிக்கை முதன்மையாகக் கொண்டிருப்பதாக ஜி.ஆர்.எஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்தார்.

ஜி.ஆர்.எஸ் உறுதியாக உள்ளது மற்றும் சபா மஜு ஜெயா கொள்கைக்கு இணங்க, மாநில அரசாங்கத்தின் முழுமையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, நாங்கள் பின்னர் முன்வைக்கும் அறிக்கையில் உள்ள அனைத்தையும் நிறைவு செய்வதாக உறுதியளிக்கிறது.

இன்று கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற 17வது சபா மாநிலத் தேர்தலுக்கான ஜி.ஆர்.எஸ் தேர்தல் கொள்கையறிக்கை வெளியீட்டு விழாவில் அவர் அவ்வாறு கூறினார்.

நாட்டின் சட்டத்தின் இறையாண்மையை நிலைநிறுத்தி வளர்ச்சியடைந்த மற்றும் வளமான சபாவை உருவாக்கும் மக்களின் போராட்டமே ஜி.ஆர்.எஸ்ஸின் போராட்டம் என்றும் ஹஜிஜி சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)