பொது

இணையப் பாதுகாப்பு: இந்தியா & ஈரானுடன் ஒத்துழைக்க மலேசியா எண்ணம்

18/11/2025 05:32 PM

அசர்பைஜான், 18 நவம்பர் (பெர்னாமா) -- தொலைத்தொடர்பு துறையில், குறிப்பாக இணையப் பாதுகாப்பு தொடர்பாக, இந்தியா மற்றும் ஈரானுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை மலேசியா ஆராய்ந்து வருகிறது.

அசர்பைஜான், பக்கு-வில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு உலக தொலைத்தொடர்பு மேம்பாட்டு மாநாடில் இந்திய தொடர்பு அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி மற்றும் ஈரானிய தொடர்பு அமைச்சர் சத்தார் ஹாஷ்மி ஆகியோருடன் நடத்தப்பட்ட இருதரப்பு சந்திப்பில் அது குறித்து விவாதிக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர்டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''சக ஊழியர்கள், தங்கள் (இந்தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த) நாடுகளில் தொலைத்தொடர்பு பிரச்சனைகளில் அனுபவமுள்ளவர்களைப் பார்க்கிறேன். இரு நாடுகளுடனும் (ஒத்துழைப்புடன்) பணியாற்ற பல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மோசடி பிரச்சனைகள், இணையப் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் மக்களுக்கு உதவக்கூடிய பல தொலைத்தொடர்பு பயன்பாடுகளை களைவதில் அவர்கள் அனுபவமுடையவர்கள்,'' என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில். 

இலக்கவியல் உள்கட்டமைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நாட்டின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் ஈரானுடனான மலேசியா நல்லுறவைப் பயன்படுத்தப்படும் என்று ஃபஹ்மி மேலும் விவரித்தார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)