பொது

தொழில்நுட்ப பயனர்களாக மட்டுமின்றி படைப்பாளர்கள் & தலைவர்களாக மலேசியா மாற வேண்டும்

19/11/2025 05:01 PM

புக்கிட் கியாரா, 19 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் உண்மையான தேவைகளை அடையாளம் காணும் அதேவேளையில், நிலையான பொருளாதார மீள்தன்மையை உறுதி செய்வதற்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாக இருப்பது மட்டுமின்றி படைப்பாளர்களாகவும் தலைவர்களாகவும் மலேசியா மாற வேண்டும்.

தொழில்நுட்பத்தை வெறுமனே ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக அதனை உருவாக்குதல் மற்றும் நீண்டகால உறுதிப்பாட்டுடனான ஆழமான திறன்கள் கொண்ட தொழில்களை உருவாக்குவதல் என்று நாட்டின் பொருளாதார வலிமை மூன்று முதன்மை கூறுகளைச் சார்ந்திருப்பதாக, பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிஃபா ஹஜார் தாயிப் கூறினார்.

"இன்றைய போட்டித்திறன் மிக்க நன்மை என்பது மதிப்பை உருவாக்குதல், திறமையாக செயல்படுதல், உலகளாவிய சந்தைகளை அடைதல், படைப்பாற்றல் மற்றும் சுறுசுறுப்புடன் நிஜ உலக சவால்களைத் தீர்க்கும் திறன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, மலேசியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து படைப்பாளர்களாகவும் தலைவர்களாகவும் மாற வேண்டும்" என டத்தோ ஹனிஃபா ஹஜார் தாயிப் கூறினார்.

இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு வி.ஐ.ஃப்.ஈ எனப்படும் (VentureTECH) புத்தாக்கக் கலந்துரையாடல் மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, டத்தோ ஹனிஃபா அதனை கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)