அரசியல்

சபா தேர்தல்: குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

18/11/2025 05:45 PM

சபா, 18 நவம்பர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தல் செயல்முறை சீராக நடைபெறாமல், அதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது அதனை சீர்குலைக்கக் கூடிய சில நபர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது.

கடந்த கால தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், நிலைமை எப்போதும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, பிரச்சனைக்குரிய இடங்களாக கருதப்படும் சுமார் 15 பகுதிகளில் தமது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

''இது கடந்த கால மாநிலத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் நிலைமையை நாம் சரியாகவும் முழுமையாகவும் கட்டுப்படுத்த முடியும். அதோடு, தொடர்புடைய தரப்பினர் அல்லது துறைகள், குறிப்பாக சி.ஐ.டி மற்றும் போதைப்பொருள் மற்றும் சிறப்புப் பிரிவுகளால் வழங்கப்படும் பணிகள் சீராக நடந்து வருகின்றன. மேலும் மோசமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று நாங்கள் கருதும் நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்,'' என்றார் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில்

இன்று, சபா, தாவாவ்வில் 17-வது மாநிலத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கை தொடர்பிலான செய்தியாளர்கள் சந்திப்பில்டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் அவ்வாறு கூறினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)