தொலைத்தொடர்புத் துறையில் மலேசியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க உகாண்டா & பல்கேரியா எண்ணம்

19/11/2025 05:37 PM

பாகு, 19 நவம்பர் (பெர்னாமா) -- தகவல் பரிமாற்றம் குறிப்பாக, தொலைத்தொடர்புத் துறையில் மலேசியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க பாகிஸ்தான், உகாண்டா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் எண்ணம் கொண்டுள்ளன.

அசர்பைஜான், பாகுவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலகத் தொலைத்தொடர்பு மேம்பாட்டு மாநாட்டிற்கு வெளியில், மூன்று நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் நடைபெற்ற இருவழி சந்திப்பில் இதன் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

அதில், உகாண்டாவின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பமும் தேசிய வழிகாட்டுதலுக்குமான அமைச்சர் கோட்ஃப்ரே பாலுகு கப்யங்கா கீமீ உடனான சந்திப்பில், அமைச்சுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கான ஒத்துழைப்பைப் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றதாக டத்தோ ஃபாமி கூறினார்.

''இது நாங்கள் செயல்படுத்தும் கொள்கைகள் குறித்து திறந்த அளவிலான மற்றும் அமைச்சு ஆராய்ந்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் இதே போன்ற கொள்கைகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே, இது எங்களுக்கு தகவல்களைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பாகும். மேலும், இது முக்கியமானது. ஏனெனில், சில நேரங்களில் அந்தத் தகவலிலிருந்து மலேசியாவில் கொள்கைகளை மேம்படுத்த நாம் கருத்தில் கொள்ளக்கூடிய சில அம்சங்கள் இருக்கலாம்,'' என டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

அதைத் தவிர்த்து, உகாண்டா எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக சாதனங்கள் மற்றும் இலக்கவியல் கல்வியறிவு அடிப்படையில், இணைய பயன்பாட்டில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மலேசியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் உகாண்டா மிகவும் ஆர்வமாக இருப்பதாக ஃபஹ்மி கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)