பெலம், 21 நவம்பர் (பெர்னாமா) -- பிரேசில், பெலமில் நடைபெறும் COP30 பருவநிலை மாநாட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கே பதற்றம் நிலவியது.
இருப்பினும், நேற்று ஏற்பட்ட அத்தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பேராளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் போது இத்தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காட்சி மையத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடத்திற்கும் பரவத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இவ்விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இவ்விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)