சபா, 21 நவம்பர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் அம்மாநில தேசிய முன்னணிக்கு உதவுவதற்காக கெடா மாநில தேசிய முன்னணியும் அம்னோவும் அம்மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளுக்குத் தங்கள் தேர்தல் கேந்திரங்களை அனுப்பியுள்ளன.
சண்டாக்கான் மண்டல தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவுவதோடு, லிபரான் மற்றும் பாது சாபியில் பிரச்சாரப் பணிகளுக்கு ஆதரவளிக்கவும், கெடா மாநில தேசிய முன்னணி கேந்திரம் அனுப்பப்பட்டதாக அம்மாநில அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ மாட்ஸிர் காலிட் கூறினார்.
''ஒவ்வொரு முறையும் தனித்தனியாக தேர்தல் நடக்கும் போது, தீபகற்பத்தில் உள்ள மாநிலங்கள் சபாவிற்கு உதவ வரும். மேலும், சபாவின் தேசிய முன்னணியும் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் உதவி வழங்க மலாக்கா மற்றும் ஜோகூருக்கு வந்துள்ளது. ஆகவே, இந்த மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் இது அசாதாரணமான விஷயம் அல்ல,'' என்றார் கெடா அம்னோ தலைவர்டத்தோ ஶ்ரீ மாட்ஸிர் காலிட்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் தேசிய முன்னணி கேந்திரங்கள் இடையே மாநிலங்கள் கடந்த ஆதரவு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.
அதுபோலவே 17-வது சபா மாநிலத் தேர்தலிலும் பகாங் மாநில கேந்திரங்கள் இணைந்து உதவிகள் வழங்குவதாக மாட்ஸிர் காலிட் சண்டாகானில் பெர்னாமா தொலைக்காட்சியிடம் கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)