உலகம்

பாதுகாப்பு கருதி நைஜீரியாவில் 47 கல்லூரிகள் மூடப்பட்டன

23/11/2025 05:39 PM

கடுனா, நவம்பர் 23 (பெர்னாமா) -- நைஜீரியாவில் உள்ள கடுனா எனும் மாநிலத்தில் பள்ளிக்குள் புகுந்து கடத்திச் செல்லப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மாணவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கை அதிகரித்து வருவதால், இதுவரை அந்நாட்டில் 47 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

சில பள்ளிகளில் ஆண்டு இறுதித் தவணை சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே கல்வி கற்கும் சாலைகள் மூடப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.

அந்நாட்டில் பள்ளிகள் அடிக்கடி ஆயுதக் குழுக்களால் குறிவைக்கப்படுகின்றன.

குறிப்பாக வட நைஜீரியா தொடர்ச்சியான பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

கிறிஸ்தவர்கள் மீதான படுகொலை சம்பவங்களைத் தடுக்க அந்நாடு முயற்சி மேற்கொள்ளவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நைஜீரியாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகள் மீது இது போன்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)