பொது

வியட்நாம், தாய்லாந்திற்கான பயணத்தை ஒத்திவைப்பீர்

24/11/2025 06:14 PM

ஜாலான் பார்லிமன், நவம்பர் 24 (பெர்னாமா) -- வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் மோசமான வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு அவ்விரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவோர் அதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது வியட்நாமின் நிலைமை கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாகக் கூறிய வெளியுறவு அமைச்சர்  டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் குறிப்பாக உள் மற்றும் மலைப்பகுதிகளில் கனமழையுடன் கூடிய வலுவான நீரோட்டம் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

''ஹோ சி மின்ந் மற்றும் ஹனோய் ஆகிய நகரங்களில் உள்ள எங்கள் தூதரகங்களில் இருந்து அண்மைய நிலவரம் குறித்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை நான் அறிக்கையைப் பெறுவேன். தற்போது காலை மணி 11 அளவில் ஹோ சி மின்ந் நகரில் உள்ள எங்கள் தூதரகத்திலிருந்து ஓர் அறிக்கையைப் பெற்றிருந்தேன். உண்மையிலேயே, டா லாக், லாய் டோங் மற்றும் கியா லாய் போன்ற மலைப்பகுதிகளில் வெள்ளம் மிகவும் மோசமாக உள்ளது.'' என்றார் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான்.

திங்கட்கிழமை, சபா, கோத்தா பெலுட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, வியட்நாமிற்கு உடனடி ஆதரவு தேவைப்பட்டால் ஜகார்த்தாவில் உள்ள ஆசியான் மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்பு மையத்தை அணுகலாம் என்றும் ஹசான் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)