உலகம்

வெள்ளம் & நிலச்சரிவால் வியட்நாமில் 90 பேர் பலி

24/11/2025 06:57 PM

வியட்நாம், 24 நவம்பர் (பெர்னாமா) -- வியட்நாமில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேரைக் காணவில்லை.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 86,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் முப்பது லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகம் மதிப்புடைய கால்நடைகளும் நீரில் அடித்து செல்லப்பட்டதாக வியட்நாம் அரசாங்கம் கூறியது.

கடந்த சனிக்கிழமை காலையில், 55 உயிரிழப்புகள் மற்றும் 13 காணாமல் போன வேளையில் தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதில், டாக் லாக் மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 63 உயிரிழப்புகள் பதிவான நிலையில் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இப்பேரிடரால் கோடிக்கணக்கான பவுண்டுகள் மதிப்புடைய சேதங்கள்  ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணித்துள்ளனர்.

கல்மேகி மற்றும் புவாளொய் ஆகிய சூறாவளிகள் ஒன்றன்பின் ஒன்றாக சில வார இடைவெளியில் வியட்நாமைத் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டை இக்கடுமையான வெள்ளமும் தற்போது சூழ்ந்து வருகிறது.

பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)