பொது

17-வது சபா மாநில தேர்தல் பிரச்சாரம் ஆரோக்கியம் & அமைதியாக இருந்தது

24/11/2025 07:26 PM

கோத்தா பெலுட், நவம்பர் 24 (பெர்னாமா) -- 17வது சபா மாநில தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய இன்னும் நான்கு நாட்கள் எஞ்சி இருக்கின்றன.

அம்மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அமைதியாகவும் ஆரோக்கியமான முறையில் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் அது அங்குள்ள வாக்காளர்களின் அரசியல் முதிர்ச்சியைப் பிரதிபலிப்பதாகத் தேசிய முன்னணியின் துணைத் தலைவர்  டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.

கடுமையான தொனியில் பிரச்சாரம் நடத்தப்பட்ட போதிலும் முந்தைய தேர்களில் காணப்பட்ட பதற்றங்கள் இல்லை என்று அம்னோ துணைத் தலைவருமான அவர் விவரித்தார்.

''சபாவில் தேர்தல் பிரச்சாரம் சில நேரங்களில் மிகவும் கடுமையாக இருந்தாலும் அமைதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சபா மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் கருத்துகளைத் தெரிவிக்கலாம். அவர்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்த இடங்கள் இருந்திருந்தால் இங்கு எந்த பதட்டமும் இல்லை,'' டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான்.

இன்று, சபா, கோத்தா பெலுட்டில் உள்ள தெம்பசுக் மாநில சட்டமன்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் பெர்னாமாவிடம் அதனை கூறினார்.

பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்னதாகவே தேசிய முன்னணி கேந்திரங்கள் அனைத்து நிலைகளிலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ முஹமட் தெரிவித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)