வங்காளதேசம், நவம்பர் 26 (பெர்னாமா) -- வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள கோரயில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் வீடுகள் தீக்கிரையாகின. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வங்காளதேச நேரப்படி நேற்று மாலை 5.22 மணிக்கு இத்தீச்சம்வம் ஏற்பட்டது. தீ மிக வேகமாக பரவத் தொடங்கியதில், அதிகமான வீடுகள் சேதமடைந்தன.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் 19 படைகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குறுகிய பாதைகள் காரணமாக தீயை அணைக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டது.
இச்சம்பவத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய முடியவில்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு கருதி குடியிருப்பாளர்கள் அவ்விடத்திற்கு அருகில் இருக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)