வியட்நாமில் இயற்கை பேரிடர்கள் ஏற்படுத்திய விளைவுகள்

26/11/2025 03:11 PM

வியட்நாம், நவம்பர் 26 (பெர்னாமா) -- ஜனவரி தொடக்கத்தில் இருந்தே வியட்நாமில் இயற்கை பேரிடர்கள் தொடர்கின்றன.

இதனால், 409 பேர் உயிரிழந்த வேளையில், 727 பேர் காயமடைந்தனர்.

மேலும், சுமார் 8,500 லட்சம் கோடி வியட்நாமிய டாங் மதிப்புடைய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

இப்பேரிடரினால், மூன்று லட்சத்து 37,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

அதோடு, லட்சக்கணக்கான ஹெக்டேர் நெல் வயல்களும் பிற பயிர்களும் வெள்ளத்தில் சேதமடைந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)