பொது

2026 வரவு செலவுத் திட்ட சட்ட மசோதா; மக்களவையில் அங்கீகாரம்

01/12/2025 06:44 PM

ஜாலான் பார்லிமன், டிசம்பர் 01 (பெர்னாமா) -- கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2026 வரவு செலவுத் திட்டத்தின் சட்ட மசோதாவை இன்று மக்களவை அங்கீகரித்துள்ளது.

குரல் பதிவு வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பின்னர் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்ட மசோதாவின் மூன்றாவது வாசிப்பை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் நிறைவுச் செய்த பின்னர் மக்கவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜோஹாரி அப்துல் அதனை அறிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் கீழ் நான்காவது முறையாகவும் RMK13 எனப்படும் 13வது மலேசிய திட்டத்தின் கீழ் முதல் முறையாகவும் 2026 வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"மக்கள் வரவு செலவுத் திட்டம்'' என்ற கருப்பொருளில் தாக்கல் செய்யப்பட்ட 2026 வரவு செலவுத் திட்டத்தில், மொத்த பொது செலவினத் தொகை 47,000 கோடி ரிங்கிட்டாகவும் இயக்க செலவினத் தொகை 33 ஆயிரத்து 820 கோடி ரிங்கிட்டாகவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)